இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே , 1974 , ஜூலை 8 ல் அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது ... இதில் , இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தவும் , புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கலாம் எனவும் ஆனால் மீன்பிடிக்க அனுமதியில்லையென ஒப்பந்தம் ஆனது ...
சமதொலைவுக் கோட்பாட்டின்படி , இருநாடுகளுக்கு இடையே கடற்பரப்பில் சமமாக எல்லைக்கோடு போடவேண்டும் ஆனால் , சமமாக எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை .. அவ்வாறு சமமாக வரையறுக்கப்பட்டால் , கச்சதீவு இந்தியாவிற்கு சொந்தமாகிவிடும் ... இதனால் , தவறாக எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது ... இது உண்மையெனில், மீண்டும் சமதொலைவு எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டு கச்சத்தீவை திரும்பப்பெறலாம்...
மேலும் , இலங்கைக்கு இந்தியா கச்சதீவை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது .. இது உண்மையென்றால், இந்தியா போன்றதொரு பெரியநாடு கொடுத்ததை திரும்ப கேட்பதென்பது அரிதான விஷயம்.... இதுபோன்ற சூழ்நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தத்தம் மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டு நல்லமுடிவை அறிவிக்கலாம்...
ஆனால் இங்கோ , மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையமாக்கி அரசியல் செய்கிறார்கள்.... ஒவ்வொரு தேர்தலிலும், கச்சதீவை மீட்போமென வெற்று வாக்குறுதிகள் மட்டுமே வந்து செல்கின்றன... ஆளும்கட்சி இவர்கள்தான் தாரைவார்த்தார்கள் என்கிறார்கள்.... எதிர்கட்சிகளோ , கச்சதீவை மீட்போம் வாக்களியுங்கள் என்கிறார்கள் (தாங்கள்தான் கொடுத்தோம் என்பதை மறந்துவிட்டு) ....
எது எவ்வாராயினும் , பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்.... நாம் உண்ணும் ஒவ்வொரு மீனின் பின்னாலும், ஒரு மீனவனின் வலியும் கண்ணீரும் மறைந்துள்ளது... தண்ணீரில் அழும் மீனின் கண்ணீர் யாருக்கும் தெரியாது... அதுபோலதான் உள்ளது இன்றைய மீனவனின் வாழ்க்கையும்....
- ஊமை இளைஞன்
Last line makes feel sad
ReplyDeleteNandri.....
Delete