அலுவலகம் முடிந்தபின்,
மடை திறந்த வெள்ளமாய்
மங்கையவளை காணச்சென்றேன் !
செல்லும் வேகத்தில் சில மேடு பள்ளங்கள் தடையாயின!
மனத்தின் தவிப்பில் மலைமேடுகளும் மறந்துபோயின..
சிந்தனைகள் சிறகடிக்க எண்ணத்தின் ஓட்டத்தில் எழுதமுடியாக் கவிதைகள் கொட்டின...
எண்ணத்தின் ஓட்டத்தில் சென்ற எனக்கு வழியெங்கும் வண்ணங்கள் வரவேற்றன!
அதில்,
சிவப்பு வண்ணமோ "சற்றுநேரம் என்னையும் கவனித்து செல்" என்றது!
வண்ணத்தின் எண்ணத்தை பூர்த்தி செய்தபின் பச்சை விளக்கொன்று
பார்த்து செல்லென பாதை காட்டியது!
மனஓட்டத்த்தில் சென்ற என்னை
மல்லியொன்று தடுத்தது!
மல்லியை அள்ளிக்கொண்டு மீண்டும்
மின்னல் வேகத்தில் பயணித்தேன்!
மின்னலுக்குப்பின் இடியிடிக்குமல்லவா?
வந்தது...
மணியோ பதினொன்று,
மனதிலோ பயமொன்று!
காணவந்த பைங்கிளி உறங்கியிருக்குமோ என்று!
எண்ணங்களனைத்தும் எரிந்துபோயின!
கனவுகளனைத்தும் கலைந்துபோயின!
நினைவுகளோ நீங்கிப்போயின!
அட என்னவொரு ஆச்சரியம்?
ஒரு பயம்,
ஓராயிரம் கனவுகளை கலைத்தது!
ஒருகோடி எண்ணங்களை தடுத்தது!
#அச்சம்_ தவிர்
நன்றி,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment