"அயலானொருவன்,
அடிமை கொண்டான்...
ஆட்டிப் படைத்தான் ...
இச்சைச் சொல்லுரைத்தான்...
ஈன்றவளை பழித்தான்...
உறவைப் பிரித்தான்...
ஊமையாக்கினான்...
எட்டி உதைத்தான்...
ஏளனம் செய்தான்.....
ஐம்புலனையும் அடக்கிவைத்தான்...
ஒய்யறம் கொண்டு ஒதுக்கி வைத்தான்...
ஓதுவார் தம்மை அருகில் வைத்தான்...
ஔரப்பிரகமாய் ஆட்டுவித்தான்...
மண்மீது மனம் சென்றது...
மதயானை பலம் வந்தது...
எதிர்த்து நின்றோம் ... எதிரிகள் கூடின...
தோட்டாக்களும் பீரங்கிக்குண்டுகளும் நெஞ்சுக்குப் பஞ்சாய் மாறின..
செங்குருதிகளை, செந்நாய்கள் ருசித்தன...
மெய்ப்பிண்டங்களை, பிணந்தின்னி கழுகுகள் இரையாக்கின...
வலிக்கவில்லை ...
சுதந்திரத்தை மறக்கவில்லை...
கொண்டோம் கனவுதேசம்... கண்டோம் சுதந்திர தேசம்...
வலிக்கிறது இப்பொழுது...
மண்ணிற்கு பெற்ற சுதந்திரத்தை, இந்த பெண்ணிற்கு பெறவில்லையே என்று ...
குடியுரிமையை பெற்று குடிகாரர்களை உருவாக்கினோமே என்று ...
உயிரை விட்டு ஊழலை பெருக்கிவிட்டோமே என்று ...
73 ஆண்டுகாலம் ஆனபின்னரும்
வறுமை தீரவில்லை...
சாதிகள் ஒழியவில்லை...
மதக்கலவரங்கள் மறையவில்லை...
லஞ்சம் குறையவில்லை...
ஊழல் மாளவில்லை...
ஏழைகளின் வாழ்வாதாரம் மாறவில்லை...
வேலையில்லா திண்டாட்டம் ஓயவில்லை...
இருப்பினும்,
நம்நாட்டில்
நம் கொடியை ஏற்றி மகிழ்வதற்கு,
பல்லாயிரக்கணக்கான போலீசார்
பாதுகாப்பு தேவைப்படுகிறதே!!!"
என்று மனம் வாடியிருப்பான்...
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
இவன்,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment