ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடம் உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள விரும்புவான். தனக்கு அருகில் இருப்பவனிடமோ அல்லது எதிரில் இருப்பவனிடமோ காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டால் தன்னிடம் உள்ள சிறப்புத் தன்மையை அல்லது விலையுயர்ந்த பொருட்களை அவனிடம்கூறி தற்பெருமை பேசுவான். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் பக்கத்தில் உள்ளவன் கருப்பாகவும் தான் சிவப்பாகவும் இருக்கும்பட்சத்தில் கருப்பாக இருப்பவனை கிண்டல் செய்வார்கள். இதனால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை. ஆனால், இரண்டு நாட்டுத் தலைவர்களின் இடையில் காழ்ப்புணர்ச்சி வந்தால் ஏற்படும் விளைவு (அ) விபரீதம் எண்ணிப்பார்க்க இயலாதவை.
அரசன் தன் எதிர்நாட்டை அடைவதற்கு அல்லது அழிப்பதற்கு யானைப்படை, குதிரைப்படை மற்றும் காலாட்படையைக்கொண்டிருப்பான் என இதிகாசத் தொடர்களில் பார்த்திருப்போம் அல்லது புத்தகங்களில் படித்திருப்போம் அல்லது சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். அரசர்களுக்கிடையில் நடக்கும் போர்களில் அரசர்கள், அமைச்சர்கள், போர்வீரர்கள் மட்டுமே உயிர்துறப்பார்கள். அதிலும் போர்க்களங்களில் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், போர் நடக்கும் முன்பு அவர்களுக்குள் சில உடன்படிக்கைகள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, இரவில் போர் தொடுக்கக்கூடாது, பெண்கள் மற்றும் குழந்தைகளை போர்க்களங்களில் அணுமதிக்கக்கூடாது முதலியன. ஆனால், அறிவியலின் வளர்ச்சி மேலோங்கிய இந்நாளில், மனிதனின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வாழ்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அவையனைத்தையும் ஒருநொடிப்பொழுதில் அழிப்பதற்கும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி உருவான ஆயுதங்களில் மனிதனின் மிகவும் மோசமான கண்டுபிடிப்பு இந்த அணு ஆயுதங்கள்.
இரண்டாம் உலகப்போர்:
1939 ஆண்டுகளின் இறுதியில் தொடங்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு நாடும் தாங்கள் வல்லரசாகும் முனைப்பில் நேசநாடுகள், அச்சுநாடுகள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து போர்தொடுத்தனர். அச்சு நாட்டைச்சார்ந்த இத்தாலியும் ஜெர்மனியும் ஒருகட்டத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்தன.ஆனால், அமெரிக்காவின் நேரெதிரியான அச்சுநாட்டைச் சார்ந்த ஜப்பானின் ஆதிக்கம் மட்டும் உச்சத்திலிருந்தது. தனியாக நின்று நேசநாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் போர்ப்படைத் தளத்தை உடைத்தெரிந்தது. அத்துடன், போர்க்கப்பல்கள் அனைத்தையும் சேதாரப்படுத்தியது. நிலைகுலைந்த அமெரிக்க அரசு, ஜப்பானை எதிர்கொள்ள தீக்குண்டுகளை வீசியது. இதனால் ஜப்பானின் ஆதிக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் வல்லரசுப் பாதையை நோக்கிக்கொண்டிருந்த ஜப்பான் அதற்கு பணியவில்லை, எதிர்த்து மீண்டும் போரிட்டது. நிலைமையை சமாளிக்க நேசநாடுகள் சார்பில் அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் 1945 ஆம் ஆண்டு ஜப்பானை எச்சரித்தார். அதில், "தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையுங்கள் இல்லையேல் விளைவு பயங்கரமானதாக இருக்கும்" என்றார். செவிசாய்க்காத ஜப்பான் அரசு போரைவிடவில்லை. கொதிப்படைந்த அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டை பயன்படுத்தலாமென தீர்மானித்தது.
லிட்டில் பாய் மற்றும் பாட் மேன்:
அணுகுண்டுகளால் ஏற்படும் விளைவுகளை முன்னரே அறிந்திருந்தும் வல்லாதிக்க எண்ணத்திலிருந்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதன்முதலில் அணுஆயுதத்தை போரில் பயன்படுத்தியது. அமெரிக்காவின் விமானப்படையைச் சார்ந்த போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து 4000 கிலோ எடையும் 3 மீட்டர் நீளமும் கொண்ட 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் 540 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது.
ஜப்பானில் வாழும் அப்பாவி பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாட வேலைகளைக்கொண்டிருந்தனர். காலை 8.15 மணியளவில் பலத்த சத்தத்துடன் சூரியனே கீழே விழுந்ததுபோல ஒளிவீசியது. அணுகுண்டு வெடித்த சிறிதுநேரத்தில் 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிந்ததில் சுமார் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர். ஹிரோஷிமா தாக்குதல் பற்றி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அறிவிக்கப்பட்ட பின்புதான் ஜப்பான் அரசுக்கு முழுமையான தகவல் கிடைத்தது.
உலகம் முழுவதும் ஹிரோஷிமா பற்றிய தகவல் கிடைப்பதற்குள், மூன்று நாளுக்குப்பின்னர் அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ஜப்பானிலுள்ள மற்றொரு இடமான நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு 500 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது. இந்த அணுகுண்டு பெயர் பாட் மேன் (அ) குண்டு மனிதன் எனப்பெயரிட்டனர். இதில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்றுநோயினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தார்கள். அணுகுண்டு வீசப்பட்டு நான்கு ஆண்டுகள் ஹிரோஷிமாவில் எந்தவொரு பூக்களும் பூக்கவில்லை. இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறக்கிறார்கள்.
ஜப்பானின் அணுஆயுத தத்துவங்கள்:
செப்டம்பரில் 3 குண்டுகளையும் அக்டோபரில் 3 குண்டுகளையும் ஜப்பானின்மீது மீண்டும் உபயோகிக்க அமெரிக்கா முடிவுசெய்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஜப்பான் அறிவித்தது. அதன்பின்னர், ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. அணு ஆயுதத்தின் தன்மையை முற்றிலும் உணர்ந்திருந்த ஜப்பான், போருக்குப்பின் மூன்று தத்துவங்களை ஏற்றது.அவைகள்:
1. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை
2. அணு ஆயுதங்களை ஜப்பானில் அனுமதிப்பதில்லை
3. அணு ஆயுதங்களை உபயோகிப்பதில்லை.
அணுஆயுத உற்பத்தியில் இந்தியா:
தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் சுமார் 40 நாடுகளிடம் அணுஆயுத மூலப்பொருட்கள் உள்ளதாகவும் அத்துடன் 31,500-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் உள்ளன எனவும் சமீபத்தில் பத்திரிக்கைகளில் வெளியாகின. ஒரு நாட்டின் வலிமையானது ஆயுதங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான், அமெரிக்கா அரசானது உலக வல்லரசில் தன்னை நிலைநாற்றிக்கொள்ள ஆண்டொன்றுக்கு ரூ. 2900 கோடி வரை அணுஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குகிறது. 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது மகிழ்ச்சியென்றாலும் அகிம்சையால் சுதந்திரம் பெற்ற நம்நாட்டில் அணுஆயுதத்தைக் கொண்டு பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
2009-ல் ஐ.நா.வில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், "அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும்." என்றார். ஆசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, மற்றும் சீனா நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ளன. இதில் சீனா மட்டும் 'அணு ஆயுதப் பரவல் தடுப்பு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பாகிஸ்தானும் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை பாகிஸ்தானும், பாகிஸ்தானை இந்தியாவும் பழிசுமத்தி அதில் கையெழுத்திட மறுத்தது.

அணு உலையில் பாதுகாப்பு:
அணுஆயுதங்கள் ஒருபுறமிருக்க, மாநிலங்கள் தோறும் அதுவும் கடற்படையையொட்டி பல்வேறு அணுஉலைகளை இந்தியா அமைத்துவருகிறது. 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்காவில் உள்ள 12 அணுஉலைகளை ஹாக்கர்கள் (ஹாக்கர்ஸ்) ஹேக் செய்து பெருத்த சேதத்தை உருவாக்கினர். ஆம், அணு உலையின் வெப்பத்திறனை அதிகரித்து சேதாரப்படுத்தியதில் பலகோடி ரூபாய் மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அணுஉலையின் வெப்பத்திறனை அதிகரிக்கும்போது அணுஉலையானது வெடித்துச் சிதறும் தன்மைகொண்டது. அனுஉலை பாதுகாப்பாக உள்ளது என அரசின் தரப்பில் கூறப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் அணுஉலை பாதுகாப்பாக இருக்குமென உறுதியாகக் கூறமுடியாது. மழை மற்றும் மற்ற இயற்கை சீற்றங்களில் கூட அவ்வளவாக பாதுகாப்பளிக்க முடியாதபோது, அணுஉலையில் விபத்தோ அல்லது எதிரிகளால் ஏதேனும் ஆபத்தோ ஏற்படும்போது எப்படி நிலைமையை சமாளிக்க முடியும் என்று ஆட்சியாளர்கள்தான் பதில்கூற வேண்டும்.
நன்றி,
ஊமை இளைஞன்
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment