பேதைப்பெண்ணே,
மோகம் கொள்ளாதே!
உன் மோகத்தில் தேக தாகம் தனிய
ஓநாய்களாய் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்!
ஓநாய்களாய் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்!
உன் கவனச்சிதறலை காசாக்க
கயவர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
கயவர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
வளைதளத்தில் வசந்த வார்த்தைகள் பல பேசி
உனக்கு வலைவிரித்துக் கொண்டிருக்கிறார்கள்!
உனக்கு வலைவிரித்துக் கொண்டிருக்கிறார்கள்!
கைப்பேசி எண்களின் மூலம்
எண்ணிலடங்கா எண்ணங்களை உன்னுள் புகுத்த நினைக்கிறார்கள்!
எண்ணிலடங்கா எண்ணங்களை உன்னுள் புகுத்த நினைக்கிறார்கள்!
காதலென்னும் பெயரில் காமத்தை முன்னிறுத்தி
உன் பெண்மையை வேட்டையாடிட
உன் பெண்மையை வேட்டையாடிட
அரக்கர்கள் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர்களின்,
ஆசை வார்த்தையில் ஆனந்தம் கொண்டிராதே!
உண்மையறியாமல் உன்னையே இழந்துவிடாதே!!!
நன்றி,
ஊமை இளைஞன்

No comments:
Post a Comment