"வெளியூர்க்காரங்க நிறையபேரு இங்க வந்து வேலை செய்வாங்க. ஒருநாளாச்சும் இந்த ஊரப்பத்தி திட்டியிருப்பாங்க ஆனால் இந்த ஊறவிட்டு போகமாட்டாங்க. அதுதான் தம்பி இந்த ஊர்". இந்த வசனம் மாநகரம் படத்தில் வரும் ஒரு உண்மைவரி. ஆமாங்க, "வேலையே கிடைக்கல மச்சான். பேசாம சென்னைக்கு போயி வேலைதேடலாம்ணு இருக்கேன்", நம்ம நண்பர்களே சில நேரங்களில் இவ்வாறு கூறியிருப்பார்கள்.வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சென்னையின் பங்கு மகத்தானது. தமிழ்நாட்டுல மொத்தம் 34 மாவட்டங்கள் இருக்கு. அந்த 34 மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் சென்னையில் இருப்பாங்க. அதுதான், சென்னையோட தனிச்சிறப்பு. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் இடம் மதராஸ் என்னும் நம்ம சென்னை. அதன் வரலாற்றைத்தான் இங்க பார்க்கப்போறோம்.
மதராஸ் உருவான வரலாறு:
1639 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் நாளன்று, கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோர் ஆங்கிலேயரின் குடியிருப்பை அதிகரிக்க, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தினருகே சென்னப்ப நாயக்கன் என்பவரது மகன்கள் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பனிடமிருந்து சிறிது நிலத்தை (இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம்) விலைக்கு வாங்கினர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பின்பு, அதைச் சுற்றியுள்ள தொன்மைவாய்ந்த பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர் மற்றும் திருவான்மியூர் முதலிய பகுதிகள் இணைக்கப்பட்டு மதராஸ் பட்டினமாக உருவெடுத்தது. 1688ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணம் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மதராசுக்கும் இடையில் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டு இணைக்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில், தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திர மாவட்டங்கள், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டம் மற்றும் கேரளத்தின் மலபார் மாவட்டம் முதலியன இருந்தன.
1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் அறிவிக்கப்பட்டது. பின்னர் 1956 -ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு மதராஸ் மாகாணமானது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை பெயர் மாற்றம்
1996 ஆம் ஆண்டு வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிலத்தை
வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே, தமிழக அரசு செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் மதராஸ் என்னும் பெயரை சென்னை என மாற்றம் செய்தது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கு நிலம் விற்கப்பட்ட இந்நாளை நாம் சென்னை தினமாக கொண்டாடுகிறோம்... இன்றுடன் சென்னைக்கு 380 வயது முடிவடைகின்றது. சென்னையுடன் சேர்ந்து நாமும் இந்நாளை கொண்டாடுவோம்..
நன்றி ,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment