Monday, 12 August 2019

காவிரியின் கண்ணீர்!


கர்நாடகத்தில் பிறந்தேன்
காடு மேடெங்கும் திரிந்தேன்!

வெள்ளத்தால் விரிந்தேன்
காவிரியென மலர்ந்தேன்!

வறண்ட நிலமெல்லாம்
வஞ்சகமின்றி நகர்ந்தேன்!

பாதைகொண்ட இடமெல்லாம் 
பசுமையுடன் இருந்தேன்!

என்னுள் சில கிளை நதிகள்
கிளைகளில் பல நிலை அருவிகள்!

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே
அரசாங்கம் அமைவதற்கு முன்னரே 
அமைத்துவிட்டேன் என் பாதையை!

அதில்,

அணையொன்று கட்டி
பூட்டொன்று பூட்டி
தாகம் தீர்க்கும் என்னை
தாண்டிச் செல்லாதே என தடுப்பதேனோ?

மனித தேகத்தின் குருதியை,
தேக பாகம் தடுத்தல் தகுமா?

யாரறிவார்?

கிளைகளும் அருவிகளும்
பிரிந்தோடும் என் குருதியென்று!

நன்றி,
ஊமை இளைஞன் 

1 comment: